உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 141-ஆவது இடம்..!

உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் பின்தங்கி, 141-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து இந்த ஆண்டும் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடம் பெற்றுள்ளது.

சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள், நாட்டில் ராணுவத்தின் செயல்பாடு ஆகியவற்றை அளவீடுகளாகக் கொண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 163 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், 136-ஆவது இடம் பெற்றிருந்த இந்தியா, இந்த ஆண்டு 5 இடங்கள் பின்தங்கி 141-ஆவது இடத்தைப்பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐஸ்லாந்து முதலிடம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் கடைசி 5 நாடுகள் வரிசையில், தெற்கு சூடான், ஏமன், இராக் ஆகிய நாடுகள் உள்ளன.
பூடான், பட்டியலில் 15-ஆ

வது இடத்தைப் பிடித்து, தெற்காசிய நாடுகளில் அமைதி மிகுந்த நாடாக  உள்ளது. அதையடுத்து 72-ஆவது இடத்தில் இலங்கை உள்ளது. நேபாளம், 76-ஆவது இடத்தையும், வங்கதேசம், 101-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 153-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

Share:

Author: theneeweb