ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார் பேசாலை உதயபுரம் பகுதியில் தனது உடைமையில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு தொகை கேரளா கஞ்சா பொதிகளுடன் ஒருவரை பேசாலை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 22 கிலோ 100 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் விரைந்து செயற்பட்டு, உதயபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரிய வருகின்றது.

Share:

Author: theneeweb