எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள எதிர்க்கட்சி தயார்

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள எதிர்க்கட்சி தயார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் என்பனவற்றில் எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள எதிர்க்கட்சி தயாராக உள்ளது.

மாகாண சபைத் தேர்தல்தன் சட்டத்திற்கு அமைய நடத்தப்படவேண்டிய தேர்தலாகும்.

எனினும், அந்தத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு, அமைச்சரவைக் கூட்டத்தை கூட்ட முடியாத அளவுக்கு வலுவடைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், அவர்களின் பிரச்சினைகளினால் மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்த முடியாது.

எனவே, அவர்கள் இருவரும் இணைந்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கான தினத்தின்போது அமைச்சரவையைக் கூட்ட வேண்டும் என்பதே தமது கருத்து என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb