வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கான நிதி விடுவிப்பில் இழுபறி, இரண்டு வாரங்களில் சீர் செய்யப்படும்.

 

கிளிநொச்யில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்களுக்கான நிதி விடுப்பில் இழுப்பறியும், தாமதமும் ஏற்பட்டுள்ளது என தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ரி. சுபாஸ்கரனை தொடர்பு கொண்டு வினவிய போது

கிளிநொச்சி மாவட்டத்தில் தங்களால் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியில் 1371 வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இவர்களுக்கான நிதியை படிப்படியாக விடுவிப்பதில் தற்காலிக தாமதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. எங்களின் தலைமை அலுவலகத்திலிருந்து போதுமான நிதி கிடைக்கப்பெறவில்லை இதனாலேயே இந்த தாமதம் இருப்பினும் இரண்டு வாரங்களுக்கு இந்த நிலைமை சீர் செய்யப்பட்டு கட்டம் கட்டமாக வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கான நிதி விடுவிப்பு இடம்பெறும் எனத் தெரிவித்த அவர். இந்த நிலைமை எ்லலா மாவட்டங்களிலும் காணப்படுகிறது. என்றும் ஆனாலும் இதுவொரு தற்காலி தாமதமே எனவும் குறிப்பிட்ட அவர்

வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் எவ்வித அச்சமும் இன்றி வீடுகளை அமைக்கும் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share:

Author: theneeweb