ஏப்ரல்21 தாக்குதலை அடுத்து தமிழகத்தில் தீவிர சோதனை

இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தமிழ் நாட்டின் மதுரையில் 3 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.

சர்வதேச பயங்கரவாதிகளுடன் சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் 3 பேரின் வீடுகளே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது மெஹமட் அசாருதின் என்ற ஒருவர் கைதானார்.

அவர் இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவின் பிரதானி என கருதப்படும் சஹ்ரன் ஹாசிமுடன் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பிலிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த 14 ஆம் திகதி கோவையில் ஷேக் ஹிதயத்துல்லா என்பவரும் ஐ. எஸ் தொடர்பு சந்தேகத்தின் பேரில் கைதாகியிருந்தார்.

அவரிடம் இருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் அவரது சமூக வலைத்தள செயற்பாடுகள் குறித்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

Share:

Author: theneeweb