மட்டக்களப்பு பல்கலைக்கழகம் பதிவு செய்யப்பட்டில்லை

மட்டக்களப்பு பல்கலைக்கழகம், உயர் கல்வியமைச்சுடன் இணைந்த அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவில் பதிவு செய்யப்பட வேண்டியுள்ள போதிலும் அவ்வாறு செய்யப்பட்டில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் அந்த அமைச்சின் குறித்த பிரிவுக்கு விஜயம் செய்து விட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஆர். உடுவாவலவை அத்துரலிய ரத்ண தேரர் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.

ஆகவே இந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலும், அதற்காக வௌிநாட்டில் இருந்து பணம் வந்த விதம் பற்றியும் தேடிப் பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Share:

Author: theneeweb