மதுபோதையில் அட்டகாசம் செய்த 12 மாணவர்கள் கைது

நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த  12 மாணவர்கள் மது போதையில் நகரில் அட்டகாசம் புரிந்ததையடுத்து குறித்த அனைவரும் புத்தலைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

புத்தலைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து புத்தலை நகருக்கு விரைந்த பொலிஸார் மதுபோதையில் அட்டகாசம் செய்த 12 மாணவர்களை கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் புத்தலையில் பகுதியிலுள்ள   நான்கு பாடசாலைகளின் மாணவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 12 பேரும் விசாரணையின் பின்னர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என புத்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb