அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ், ரிஷாத் ஆகியோரைக் கைதுசெய்ய வேண்டும்: தேசிய சுதந்திர முன்னணி

சஹ்­ரானின் குழு முழு­மை­யாக அழிக்­கப்­பட வேண்­டு­மானால் அசாத் சாலி,  ஹிஸ்­புல்லாஹ் மற்றும் ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோ­ரிடம் வாக்கு மூலம் பெற்றால் மாத்­திரம் போதாது. அவர்­களைக் கைது செய்ய வேண்டும். அதே­போன்று  பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணைக்கு ஓய்­வு­பெற்ற  கேகாலை மாவட்­டத்­துக்கு பொறுப்­பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறி­வர்­தன அழைக்­கப்­பட்டால்  பொலிஸ்மா அதிபர் உள்­ளிட்ட பலர் தொடர்­பான உண்மைத் தக­வல்கள் தெரிய வரும் என்று தேசிய  சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயந்த சம­ர­வீர தெரி­வித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியில் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில்  இதனைத் தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

ஏப்ரல் 21  தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்­களை தடுத்திருக்க முடியும் என்று கடந்த காலங்­களில் தகுந்த சாட்­சி­க­ளுடன்  நாங்கள் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தோம். அதற்­க­மை­வாக இந்த குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய மாவ­னல்லை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற  புத்தர் சிலை­க­ளைச் சேதம் செய்த சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்த ஓய்­வு­பெற்ற  கேகாலை மாவட்­டத்­துக்கு பொறுப்­பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறி­வர்­த­னவும்  இந்த தாக்­கு­தல்­களைத் தடுத்­தி­ருக்க முடியும்  என்று தெரி­வித்­துள்ளார்.

மாவ­னல்லை புத்தர் சிலை­களை சேதம் செய்த விவ­காரம்  தொடர்பில் நேரடி விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­மையின் கார­ணத்­தி­னா­லேயே அவரும் இந்த தாக்­கு­தல்­களை தடுத்து நிறுத்­தி­யி­ருக்க முடியும் என்று குறிப்­பி­டு­கிறார். மாவ­னல்லை சம்வம் தொடர்பில் விசா­ரணை செய்ய  வென நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த அந்த குழுவின் தலை­வ­ராக இருந்த உதவி பொலிஸ் அதி­யட்­சகர் காமினி தென்­னக்கோன் உள்­ளிட்ட கட்­டாய விடு­மு­றையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர போன்­றோரே முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்த விசா­ர­ணைக்­குழு கடந்த வரு­டத்தின் இறு­தியில் மாவ­னல்லை சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­டுள்ள இப்­ராஹிம் சாதித் மற்றும் இப்­ராஹிம் சாஹித் ஆகிய இரு­வ­ரையும் அசாத் சாலி பொலி­ஸ­ாரிடம்  ஒப்­ப­டைக்க தயா­ராக உள்­ள­தாக அறி­வித்­தி­ருந்­தது. அந்த சந்­தர்ப்­பத்தில் மொஹமட் இப்­ராஹிம் உட்­பட ஏழு பேர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவரின் மகன்­க­ளாக கரு­தப்­படும்  இப்­ராஹிம் சாதித் மற்றும் இப்­ராஹிம் சாஹித் ஆகி­யோரைப் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்க அசாத் சாலி தயா­ரா­க­வுள்­ள­தா­கவும்  அசாத் சாலி­யிடம்  கதைக்­கு­மாறும் மாவ­னல்லை  புத்தர் சிலை உடைப்பு விவ­காரம்  தொடர்பில் விசா­ரணை செய்­ய­வென நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழுவின்  தலைவர்  உதவி பொலிஸ் அதி­யட்­சகர் காமினி தென்­னக்­கோ­னுக்கு பொலிஸ் மா அதிபர் அறி­வித்­தி­ருந்தார்.

அதன் பின்னர் இவர்கள் இரு­வ­ரையும் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு விசா­ர­ணைக்­கு­ழுவின் தலைவர்  அசாத்  சாலிக்கு அறி­வித்­தி­ருந்த போதிலும்  இறு­தி­வ­ரையில் அவர்­களைப் பொலி­ஸா­ரிடம்  ஒப்­ப­டைக்­காமல் மழுப்பி வந்­துள்ளார். இந்த விட­யத்தை விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த அந்த பொலிஸ் குழு­வி­னரே ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். அவ்­வா­றாயின் உட­ன­டி­யாக பொலிஸ்மா அதிபர், அசாத் சாலி­யிடம்  வாக்கு மூலத்தைப் பெற்­றி­ருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்­ய­வில்லை.

இது தொடர்பில்  இர­க­சிய பொலி­ஸாரின் விசா­ர­ணை­களின்  அடிப்­ப­டையில்  வனாத்­து­வில்லு பிர­தே­சத்தில்  ஆயு­தங்கள் கைப்­பற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. அதனை அடுத்து  சஹ்ரான் உள்­ளிட்ட அவர்­களின்  பயிற்சி நட­வ­டிக்­கைகள்  உட்­பட அனைத்து செயற்­பா­டு­களும்  வெளி­யா­கின. இந்த தக­வல்கள் அனைத்தும் வெளிப்­பட்­டி­ருக்கும்  சந்­தர்ப்­பத்தில் தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருக்க முடியும்.  ஆனால் விசா­ர­ணைகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை.

அதன் பின்னர்  குண்­டுத்­தாக்­குதல்  சம்­ப­வங்கள்  இடம்­பெறும் வரை  7 பீ அறிக்­கைகள்  சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.  இறு­தி­யாக  ஏப்ரல் 10 ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்ட பீ அறிக்­கை­யி­னூ­டா­கவே  சஹ்­ரானின்  பயிற்சி முகாமில் கைது செய்­யப்­பட்ட பிர­தான இரண்டு சந்­தேக நபர்கள் பிணையில்  விடு­தலை செய்­யப்­பட்­டனர். அர­சாங்­கத்­த­ரப்­பி­ன­ரதும் முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் கோரிக்­கை­க­ளுக்கு அமை­வா­கவே இவர்கள் இரு­வ­ரையும்  விடு­தலை செய்­தார்களா என்ற கேள்வி எழு­கி­றது.

புத்தர் சிலை­களை  உடைத்­த­மைக்­காக  சஹ்­ரானால் 20 இலட்சம் ரூபா வழங்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­மன்றம் குறிப்­பி­டு­கி­றது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில்  மாவ­னல்லை சம்­ப­வத்­துடன் தொடர்­பிலும் வெளி­நாட்டு புல­னாய்­வுத்­து­றையின் புலனாய்வு தக­வல்கள் தொடர்­பிலும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தால் இதனை தடுத்து நிறுத்­தி­யி­ருக்க முடியும். ஆனால் அவ்­வாறு எத­னையும் செய்­ய­வில்லை.  தற்­போது எந்­த­வித செயற்­தி­றனும் இல்­லாத  பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வுக்கு ஓய்­வு­பெற்ற  கேகாலை மாவட்­டத்­துக்குப் பொறுப்­பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறி­வர்­த­னவை அழைத்து  ஊட­கங்­களின் முன்­னி­லையில் விசா­ர­ணை­களை செய்ய தயா­ராகி விட்­டனர்.

அவ்­வாறு அவர் தெரி­வுக்­குழு விசா­ர­ணைக்­கு அழைக்கப்­பட்டால்  இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு பின்­னணிக் கார­ணங்கள் தொடர்­பான அனைத்து  உண்­மை­களும் பகி­ரங்­க­மாகும்.  அதேபோன்று ஜனாதிபதியின் விசாரணைகளையும் தடுத்து நிறுத்தினர். சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட வேண்டுமாயின் அசாத் சாலி,  ஹிஸ்புல்லாஹ் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற்றால் மாத்திரம் போதாது. அவர்களை கைது செய்ய வேண்டும்.  முஜிபுர் ரஹ்மான் தொடர்பிலும் ஆராய வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் இதனுடன் தொடர்பு பட்டுள்ளார்கள். இது தொடர்பில் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும். என்றார்.

Share:

Author: theneeweb