போதைப்பொருள் வர்த்தகருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

ஹெரோயின் கைவசம் வைத்திருந்தல் மற்றும் கொண்டு சென்ற சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மொஹமட் இப்ராஹிம் மொஹமட் ஜெப்ரி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவால் இன்றைய தினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு கொஸ்கஸ் சந்தி பகுதியில் குறித்த சந்தேக நபர், 4.4 கிராம் ஹெரோயினை கைவசம் வைத்திருத்தல் மற்றும் கொண்டு சென்ற குற்றச்சாட்டுக்கு அமைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share:

Author: theneeweb