பாரிஸ் மாநகரில் வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா நூல்கள் வெளியீடு..!

ஈழத்தின் புகழ்பூத்த தமிழாசான் வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நூல்களின் வெளியீடு பாரிஸ் மாநகரில் 23 -ம் திகதி (23 – 06 – 2019) ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. மூத்த எழுத்தாளர் – ‘கலாபூஷணம்” வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் வேந்தனாரின் ‘குழந்தை மொழி” (மூன்று பாகங்கள);; – வேந்தனார் கட்டுரைகள்; – ‘செந்தமிழ் வேந்தன்” நூற்றாண்டு விழா மலர் (548 பக்கங்கள்) ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

இவ்விழாவில் வரவேற்புரையை திருமதி அமுதினி படிகலிங்கம் வழங்குவார். கலை இலக்கியச் செயற்பாட்டாளர்கள் க. முகுந்தன் – க. வாசுதேவன் – வண்ணை தெய்வம் – சு. கருணாநிதி – குகன் குணரட்ணம் – சி. மனோகரன் – வி. பாஸ்கரன் – யாழ்நிலா ஆகியோர் நூல்கள் குறித்தும் வேந்தனாரின் இலக்கியப் பங்களிப்புக் குறித்தும் கருத்துரை வழங்குவர். வேந்தனார் இளஞ்சேய் ஏற்புரை வழங்குவார். ‘தமிழ்மணி” தேவன் நன்றியுரையாற்றுவார். வேந்தனாரின் குழந்தைப் பாடல்கள் சிலவற்றுக்கான நடன நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பிரான்ஸ் கிளையினர் இவ்விழர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
வேந்தனார் நூற்றாண்டு விழாவும் நூல்கள் வெளியீடும் ஏற்கனவே இலண்டன் மாநகரில் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

– இ. ஓவியா

 

Share:

Author: theneeweb