கல்முனைமாநகரசபை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்; – வீ.ஆனந்தசங்கரி

ஊடகச் செய்தி

இலண்டணில் இருந்துஆனந்தசங்கரி

22.06.2019

கல்முனைமாநகரசபை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்;

கல்முனைமாநகரசபை உறுப்பினர்களான கௌரவ. காத்தமுத்து கணேசன் மற்றும் சுமித்திரா ஜெகதீசன் ஆகியோர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டார்கள். சமீபகாலமாக இவர்கள் இருவரும் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளிலும ;,கட்சிவிரோத நடவடிக்கைகளிலும் மற்றும் கட்சியின் கொள்கைகளுக்கு முரணானவகையிலும் செயற்பட்டு வந்துள்ளார்கள் என்பது அவர்கள்மீது மேற்கொண்ட விசாரணைகள் மூலமாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் காத்தமுத்து கணேசன் அவர்கள் கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் என்றபதவியை வைத்துக்n காண்டுபல மோசடிநடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளார் என்பதும் மேலதிக விசாரணைகள் மூலமாக தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரிடமும் இனிமேல் தமிழர் விடுதலைக் கூட்டணிஉறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எவரும் கட்சிரீதியான எவ்வித தொடர்புகளையும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
விரைவில் அவர்கள் இருவரையும் கல்முனைமாநகரசபை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதனைகட்சியின் சகலஉறுப்பினர்களுக்கும் அறியத் தருகின்றேன்.

வீ.ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி

Share:

Author: theneeweb