வௌிநாட்டு நிதி சம்பந்தமாக சர்வதேச விசாரணை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ள வௌிநாட்டு நிதி சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, அது சம்பந்தமாக பரிசோதனை செய்துள்ள பாராளுமன்ற கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி குழு பரிந்துரைத்துள்ளது.

வௌிநாட்டு அமைச்சின் ஊடாக அந்த விசாரணை நடவடிக்கை இடம்பெற வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க கூறியுள்ளார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை நேற்று பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb