வட மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

பருத்தித்துறையில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனுக்கு, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவரின் செயற்பாடு தொடர்பில் அதிபரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில், அதிபர் குறித்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தார் என ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஆளுநர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசாரணைக் குழுவொன்றினையும் நியமிக்குமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share:

Author: theneeweb