அனைத்து பயங்கரவாதிகளையும் கைது செய்ய வேண்டும்

இலங்கையில் உள்ள அனைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளையும், கைது செய்ய வேண்டும் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தான் ஆலோசனை வழங்கியிருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், சஹ்ரானின் பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு அல்லது தடுத்துவைப்பதற்கான உத்தரவில் உள்ளனர்.

ஒருவர்கூட வெளியில் இல்லை.

அது மாத்திரமன்றி, மேலும் பல குழுக்களும் கைது செய்யப்பட்டுள்ளன.

அப்படியானால், உண்மையாக இன்று பாதுகாப்பு கிடைத்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 4ஆம் திகதி கிடைத்த தகவலுக்கு அமைய ஏன் செயற்படவில்லை என்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலும், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவிலும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராயப்படுகிறது.

இதேவேளை, குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், 12 மணியளவில் பாதுகாப்பு அமைச்சிற்குத் தான் சென்றதாகவும், ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் தொடர்புகொண்டு, இலங்கையில் உள்ள அனைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், மன்னிப்பு வழங்காமல் அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் எனத் தெரிவித்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb