மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டவிரோதமாயின் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் – ஜே.வி.பி

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டவிரோதமானதாயின் அதனை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கையை நாங்கள் பரிசீலனை செய்தோம்.

இந்த பல்லைக்கழகத்தின் சகல பிரிவுகளும் சட்டவிரோதமானது.

இலங்கை வரலாற்றில் எந்தவித சட்டமுறைமைகளும் பின்பற்றாது அதிகளவு பணம் தனிநபர் ஒருவருக்கு வைப்பிலிடப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

இந்த பல்கலைக்கழகம் போலி ஆவணங்களை சமர்பித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய மற்றும் அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb