18 ஆம் மற்றும் 19 ஆம் திருத்த சட்டங்களை இரத்துச் செய்ய வேண்டும் – ஜனாதிபதி

நாட்டினுள் நல்லாட்சியை ஸ்தாபிப்பதற்கு அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்களை இரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

18 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்பட்ட மன்னர் ஆட்சி மற்றும் சர்வாதிகார தோற்றத்தின் காரணமாக புதிதாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.

எனினும் அதனூடாக ஒரு அரசியல் தலைமையின் கீழ் பயணிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

இதனால் நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது.

அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனதாக ஜனாதிபதி; தெரிவித்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் நாட்டு மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளும் மக்கள்நேய ஆட்சியே நாட்டுக்கு தேவை.

அரசியல் தலைமைகள் நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

நாட்டின் அபிவிருத்திக்கு வலுவான சக்தியாக கருதப்படும் சுமார் 16 லட்சம் அரச ஊழியர்கள் ஊழல் மற்றும் மோசடிகளை தவிர்த்து தங்களது கடமைகளை உரியவகையில் மேற்கொள்வார்களாயின்; பொதுமக்களின் தேவைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Author: theneeweb