கிளிநொச்சி ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் T10 கிண்ணத்தை தர்மபுரம் சுவீகரித்ததுள்ளது

கிளிநொச்சி ஆனந்தபுரம் ஐக்கிய விளையாட்டுக் கழகம் வருடாந்தம் நடத்துகின்ற T10 கிண்ணத்தை தர்மபுரம் இளம்தாரகை விளையாட்டுக் கழகம் சுவீகரித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக பன்னிரண்டு அணிகள் பங்குப்பற்றிய போட்டியின் இறுதி போட்டி நேற்று 23.06.2019 கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற உருத்திரபுரம் இந்து இளைஞர் அணியினருக்கும், தர்மபுரம் இளம்தாரகை அணியினருக்கும் இடையே இடம்பெற்ற போட்டியில் தர்மபுரம் அணி வெற்றிப்பெற்றது.

மிகவும் பரப்பான ஆட்டத்தில் இளம்தாரகை அணியின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் களத்தடுப்புக் காரணமாக வெற்றி இலக்கான பத்து ஓவர்களில் 95 என்ற இலக்கை உருத்திரபுரம் இந்து இளைஞர் அணியினரால் எட்ட முடியாது போய்விட்டது.

எனவே வெற்றியீட்டிய அணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதான அணுசரனையில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டிய அணிக்கு இருபதாயிரம் பணமும் வெற்றிக்கிண்ணமும், இரண்டாவது அணிக்கு பத்தாயிரம் ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும், மூன்றாவது அணிக்கு ஐயாயிரம் ரூபா பணமும் வெற்றிக் கிண்ணமு் வழங்கப்பட்டதோடு, சிறந்த துடுப்பாட்ட வீரர் சிறந்த பந்து வீச்சாளர், ஆட்டநாயகன், தொடர் ஆட்டநாயகன் உள்ளிட்ட பல பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் மு. இரவீந்திரன், கிளிநொச்சி இந்துக் கல்லூரி அதிபர் விக்கினராஜா, கிளிநொச்சி கிரிக்கெட் லீக்கின் தலைவர் செயலாளர் கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி நகர் உறுப்பினர்கள் ரஜனிகாந், மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டன

Share:

Author: theneeweb