ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம்

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுவதில் தமக்கு உடன்பாடில்லை என அமைச்சர் ரவுப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

கண்டி – தலாதுஓய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்று கூறுவதில் ஐயம் இருக்கிறது.

தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் தொலைபேசியில் அழைத்து இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்குமாறு கூறிய பின்னரே இரண்டு நாட்கள் கழித்து இந்த தாக்குதலை தாங்கள் பொறுப்பேற்பதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்தனர்.

இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதேநேரம், கூட்டாக பதவி விலகியமை தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அவற்றிற்கெல்லாம் பதில் கூறிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்தல் நெருங்குகிறது.

தேர்தலுக்காக நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.

அரசாங்கத்தின் மீது எனக்கு அதிருப்தி இல்லை.

தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது வலியுறுத்தலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb