நிதி கிடைக்கப்பெற்ற விதம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்திற்கு 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்ற விதம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கல்வி மற்றும் மனித வளங்கள் அபிவிருத்திக்கான நாடாளுமன்ற மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த விசாரணைக்காக வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபிய தூதரகத்தின் உதவியை பெற்றுக்கொள்ளவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த நிதி தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகியோர் பரஸ்பர முரண்பட்ட தகவல்களை வழங்கியிருந்தனர்.

இந்த தனியார் பல்கலைகழகத்திற்கான நிதி மூலம் குறித்த ஐயம் நிலவுவதால் அது சம்மந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb