கதிர்காமர் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் சிறையில் மரணம்

முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 15 வருடங்களாக வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்தார்.

62 வயதான சகாதேவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுகயீனம் காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது பூதவுடலை மரண பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தாரிடம் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb