கிளிநொச்சியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் வடமாகாண நிகழ்வு

போதையிலிருந்து விடுப்பட்ட நாடு, நான் போதையை எதிர்க்கிறேன் ஆகிய தொணிப்பொருளில் கிளிநொச்சியில் வடக்கு மாகாணத்தின் நிகழ்வு இன்று(25-06-2019) இடம்பெற்றது.
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் இம்மாதம் 23 திகதி தொடக்கம் முதலாம் திகதி வரை நாடாளவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் வடக்கு மாகாணத்தின் நிகழ்வு இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி ஆரம்பமாகி நடைப்பெற்றது. வடக்கிலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திணைக்களங்களின் விழிப்புணர்வு வாகன அணிவகுப்பு கிளிநொச்சியை வந்தடைந்து கிளிநொச்சி நகரிலிருந்து ஊர்வலமாக மத்திய கல்லூரி மைதானத்தை சென்றடைந்தது.

பின்னர் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இங்கு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்புரை நிகழ்த்த வட மாகாண ஆளுநர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் உரையாற்றினார்கள், தொடர்ந்து சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா அரச அதிபர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், பொலீஸ் மற்றும் இராணுவத்தினர், உத்தியோத்தர்கள். மாணவர்கள் சமூக மட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb