ஆளுநரின் ஆலோசனையில் வலி கிழக்கில் போதைக்கு எதிரான செயற்றிட்டம்

வலிகாமம் கிழக்கில் போதைக்கு எதிரான வார செயற்றிட்டங்கள் பிரதேசம் தோறும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில,; நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைக்கு எதிரான வார நடவடிக்கைகள் ஆளுநரின் ஆலோசனைக்கமைய வடக்கு மாகாணத்தின் சகல திணைக்களங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அச் செயற்றிட்டத்தில் அரச அலுவலகங்களில் போதைக்கு எதிரான காட்சிப்படுத்தல்கள் மற்றும் விழிப்புனர்வு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் எமது பிரதேச சபையும் ஆளுநரின் ஆலோசனையின் பிரகாரம் பிரசுரங்களை வெளியிட்டிருக்கின்றது. இவற்றினைப் பயன்படுத்தி சபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்ததாக போதைக்கு எதிரான செயற்றிட்டங்களை வலிகாமம் கிழக்குப் பிரதேசங்களில் நாம் ஆரம்பித்துள்ளோம். இச் செயற்றிட்டங்களில் கோப்பாய் பொலிசாரினதும் அச்சுவேலி பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டு செயற்றிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை(25) காலையில் உரும்பிராய் பிரதேச சபையின் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை நாளை புதன்கிழமை காலை அச்சுவேலி உப அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போதை எதிர்ப்பிற்கான நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன. நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை கோப்பாய் உப அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி இவ் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதை எதிர்ப்பிற்கான செயற்றிட்டங்கள் ஆரமஇடம்பெறவுள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீர்வேலி உப அலுவலக பகுதியிலும் இறுதியாக திங்கட்கிழமை தலைமை அலுவலகமும் புத்தூர் உப அலுவலகமும் இணைந்ததாக போதைக்கு எதிரான செயற்றிட்டத்தினை வகுத்து நடைமுறைப்படுத்தவுள்ளன.

போதையற்ற தேசம் ஒன்றை உருவாக்குவதில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஏற்கனவே தமது சபை உறுப்பினர் ஐங்கரனினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையினை ஏகமனதாக ஏற்று நிறைவேற்றியிருந்தது. பல விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களையும் நடைமுபை;படுத்தியிருந்தது. தொடர்ந்தும் போதைக்கெதிரான செயற்றிட்டத்தினை சபை நிறைவேற்றும் எனவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb