முஸ்லிம்களுக்கு வியாபாரம் செய்ய தடைவிதித்த பிரதேச சபை தவிசாளர் உட்பட 6 பேரிற்கு அழைப்பானை

வென்னப்புவ பிரதேச சபையினால் வௌியிட்டப்பட்ட தடை உத்தரவு தொடர்பில் வென்னப்புவ பிரதேச சபை தவிசாளர் உட்பட 6 பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பிரதேச சபையினால் நேற்று (24) தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று (25) தங்கொட்டுவ பொலிஸாரிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மாரவில நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன்போது வென்னப்புவ பிரதேச சபை தவிசாளர் கே.வி சுசந்த உட்பட 6 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணத்தை விளக்கப்படுத்துமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb