ஜனாதிபதியால் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்!

 

அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்களை நியமிக்கும் போது, ஜனாதிபதி செயலாளரால் வௌியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு அமைய செயற்படுவது கட்டாயமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதியால் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள் தொடர்பில் தகுதி நிலை தொடர்பில் பரிசோதித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் தலைமையிலான குழுவொன்றும் அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

அதன்படி இவ்வாறு நயமிக்கப்பட உள்ளவர்களின் தகுதிகளை ஆராய்ந்து பரிந்துரை முன்வைப்பதற்காக அவர்களின் பெயர் விபரங்களை இந்த குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Share:

Author: theneeweb