கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய இணக்கம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்வதற்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்தக் குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்வதற்கு கோரி கோட்டாபய ராஜபக்ஷ விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த போது, அது நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த நிராகரிப்புக்கு எதிராக அவரது சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.

இந்த மனு அழைக்கப்பட்ட போது குறித்த குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்வதற்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb