மரண தண்டனை நிறைவேற்றம் – கையொப்பமிட்ட ஜனாதிபதி

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 4 பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கான ஆவணத்தில் இன்று தான் கையொப்பமிட்டதாகவும், அது எதிர்வரும் 2 வாரங்களில் நடைமுறையாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கொலன்னாவ ரஜமகா விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் எதிர்ப்புக்களையும் முன்வைத்து தன்னை குற்றவாளியாக அடையாளப்படுத்துவதற்கு எத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தாலும் நாட்டின் நலனுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நற்செயல்களிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb