நளினி முருகன் தொடர்பில் சென்னை மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி முருகனை எதிர்வரும் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நீதிமன்றில் நேரடியாக முன்னிலையாக அனுமதிக்குமாறு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் வசிக்கும் தமது மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரி நளினி முருகன் சென்னை மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகளான எம்.எம் சுதர்ஷன், எம். நிர்மல் குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டது.

இதுவரையில் தொலை காணொளி தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட நளினி முருகன், தமது வாதங்களை முன்வைக்க நீதிமன்றில் நேரடியாக முன்னிலையாவதற்கு அனுமதிக்குமாறு கேட்டிருந்தார்.

இதன்படி நளினி முருகனை எதிர்வரும் ஜூலை 5 மாதம் ஐந்தாம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் நீதிமன்றில் முன்னிலையாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகன், ஆயுள் தண்டனை கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்த விடுமுறை உரிமை தமக்கு வழங்கப்படவில்லை என தமது மனுவில் சுட்டிக்காட்டினார்.

Share:

Author: theneeweb