ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக நிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான யோசனையை வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன முன்வைத்ததுடன் அதற்கு அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான கூட்டணி சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகவும் பெயரிட்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான கூட்டணி குறித்து ஆராய 7பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
Share:

Author: theneeweb