முல்லைத்தீவில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு சபாநாயகர் நட்டஈடு வழங்கினார்

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நட்டஈடு வழங்கியுள்ளார். முல்லைத்தீவுக்கு நேற்று (03) விஜயம் செய்த அவர், மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கி வைத்ததுடன், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகளையும் மாவட்ட செயலாளரிடம் கையளித்தார்.

அத்தோடு, மாவட்டத்தின் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்த அவர், அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் அமைச்சர் தயாகமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா உள்ளிட்டவர்களும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb