எல்ரீரீஈ அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள காடொன்றில் இருந்து நிலக்கீழ் வெடிபொருட்கள் உள்ளடங்கிய பொதி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

25 நிலக்கீழ் வெடிபொருட்கள் குறித்த பொதியில் இருந்ததாகவும் குறித்த பொதிக்கு அருகில் ஆர்.பி.ஜி தோட்ட ஒன்று இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் குறித்த வெடிபொருட்களை செயலிழக்க செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்ரீரீஈ அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே இவ்வாறு கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb