கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள நிழல் தரும் பாரிய மரத்தை அசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சி

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாக உள்ள பாரிய மரம் ஒன்றை அருகில் உள்ள நகை கடைக்காரர் அசிட் ஊற்றி கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏ9 வீதியில் மேற்குறித்த இடத்தில் பச்சையாக பரந்து விரிந்து அழகாக பாரிய மரம் ஒன்று காணப்படுகிறது. இந்த மரத்தின் கீழ் முச்சக்கர வண்டி தரிப்பிடம் உண்டு, அத்தோடு பேரூந்துக்காக காத்திருக்கி்ன்ற மக்கள் மற்றும் வெயிலுக்கு ஓதுங்குகின்ற மக்கள் என பெருமளவானவர்கள் கூடுகின்ற இடம்.

இந்த .இடத்தில் வாடகைக்கு கட்டடத்தில் நகைக் கடை ஒன்றும் காணப்படுகிறது. இவர்களுக்கு குறித்த மரத்தின் கீழ் முச்சக்கர வண்டி தரிப்பிடம் இருப்பது மற்றும் மக்கள் ஒன்று சேர்வது தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கருதி நேற்று சனிக்கிழமை அதிகாலை நகைக்கடையினை சேர்ந்த ஒருவரால் மரத்தைச் சுற்றி அசிட் ஊற்றப்பட்டுள்ளது. இதனை அருகில் உள்ள வியாபார நிலையத்தில் பணியாற்றுகின்ற ஒருவர் அவதானித்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். மரத்திற்கு அருகில் சென்ற போது அசிட் நாற்றம் வீசியுள்ளது. எனவே உடனடியாக கிளிநொச்சி பொலீஸார் மற்றும் கரைச்சி பிரதேச சபைக்கு அவர்கள் அறிவித்திருக்கி்ன்றார்கள்.

இதனையடுத்து பொலீஸாரால் இருவர் கைது செய்யப்பட்டு ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் மரத்தை சுற்றி உள்ள மண் அகற்றப்பட்டு புதிய மண் இடப்பட்டு சீர் செய்யப்படுவதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இன்னும் சில நாட்களின் பின்னரே மரம் உயிரோடு இருக்குமா? இறந்து போகுமா, என்பது தெரியவரும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb