வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுக்ள இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுக்ள இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் முப்பதாம் திகதி மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டமே இன்றைய தினமும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் முன்பாக இடம்பெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது போராட்டத்தை ஆரம்பித்து இன்று(3) 859 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது பல்வேறு கோசங்களை அவர்கள் எழுப்பியதுடன், தமது பிள்ளைகள், உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தமாறு தெரிவித்து சுமார் 1 மணிநேரம் ஏ9 வீதியின் ஓரத்தில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Share:

Author: theneeweb