கிளிநொச்சி கல்லாறு பிரதேசத்தில் அளவுக்கடங்கா சட்டவிரோத மண்ணகழ்வு

கிளிநொச்சி கல்லாறு பிரதேசத்தில் அளவுக்கடங்கா சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள வனம் அழிக்கப்பட்டு இவ்வாறு பாரிய அளவில் மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றது, மண்ணகழ்வு இடம்பெற்று வரும் பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான அதேவேளை, பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்றது. குறித்த பகுதியில் சுமார் 5 அடிக்கு மேல் தோண்டப்பட்டு மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

குறித்த சட்டவிரோத மண்ணகழ்வு தொடரபில் பல்வேறு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண்ணகழ்வு காரணமாக கடல் நீர் உட்புகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள், எதிர்கால சந்தத்தி இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share:

Author: theneeweb