தியாகம் செய்தவர்களுக்கு வாக்களிக்கபட்ட பாதையில் பயணிப்போம.;

தியாகிகளை நினைவு கூருகையில் அவர்கள் நேசித்த விடுதலை -சமூக பொருளாதார நிலைமைகள் இன்று எவ்வாறிருக்கின்றன என்பது சிந்திக்கப்பட வேண்டும்.
வெறும் சம்பிரதாயமாக இருக்க முடியாது.

சுதந்திரம் -சமத்துவம்- சகோதரத்துவம் என்னும் முதலாவது பிரான்சுப் புரட்சியின் எழுச்சிக் கோசங்கள் போன்றவை எமது தோழர்களின் கனவுகள்.
இன்று சுதந்திரம் எவ்வாறிருக்கிறது.

சமதர்ம ஈழம் கனவு பேரினவாதத்தாலும்; சகோதர படுகொலைவாதத்தாலும் தற்காலிகமாக சிதைக்கப்பட்டிருந்தாலும் சுயநிர்ணயத்திற்கான ,சமத்துவத்திற்கான, சமூக நீதிக்கான குரல்கள் ஓயாத அலையாக உலகம் முழுவதும் வியாபித்து நிற்கின்றன.

தேசிய – வர்க்க ஒடுக்குமுறை ,சமூக நீதியை மறுக்கும் சக்திகள் தற்காலிகமாக எழுச்சி பெறினும் இதையெல்லாம் மீறி சமூக மட்டத்தில் அமைதியின்மை எழுச்சி உணர்வுகள் பரவாலாக காணப்படுகின்றன.

எனினும் இனமதவாத நிறவாத சக்திகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான, உலகை ஓயாத பயங்கரவாத யுத்தநிலையில் வைத்திருக்கும் உலக வளங்களை வழித்து துடைக்கும் உலகின் முக்காற்பங்கு மக்களை வறுமை பஞ்சம் யுத்த பயங்கரவாத சூழலில் தள்ளிவிட்டிருக்கும் சக்திகள் தலை எடுத்துள்ளன.

சமூக பாதுகாப்பு உலக சமூக பாதுகாப்பு பற்றி இவைக்கு எந்த அக்களையும் கிடையாது.
உலக வளங்களை உறிஞ்சியெடுக்கும் கலியுக அவதாரம் போல.
ட்ரம்மின் அமெரிக்கா உலகளாவிய பழைய ஏகாதிபத்திய கனவுகளுடன் உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் நப்பாசையை கொண்டுள்ளது

இந்தியா சீனா பிரேசில் தென்னாபிரிக்கா பிரான்ஸ் யேர்மனி என வர்த்தக பன்முகத்தன்மை மற்றும் அமெரிக்க ஏகபோகத்திற்கிடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

இந்த முரண்பாடுகள் ஒரு புறம் இருக்க உலகளாவிய மத பயங்கரவாத சக்திகள் கண்மூடித்தனமாக மக்களை கொன்றொழித்து வருகின்றன.சகல மானிடவிழுமியங்களுக்கும் எதிராக இருக்கின்றன.
முன்னேறிய நாடுகள் ஜனநாயக நாடுகள் என்று இதுவரை கருதப்பட்ட நாடுகளில் கூட இனஇமதஇநிற வெறுப்பு புத்துயிர் பெற்றுள்ளன.

நவதாராளவாத உலகில் ஏற்ற இறக்கங்களுடன் இவை இலங்கையிலும் உருவெடுத்துள்ளன. உயிர்த்த ஞாயிறன்று மனிதத்தின் மீது விசப்பட் இன மத வெறுப்பு தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலுமாக நூற்றுக்கணக்கான உயி;ர்களை காவு கொண்டன. 500க்கு மேற்பட்டவர்கள் படு காயங்களுக்குள்ளாhனார்கள்.

ஆனால் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது போல் இலங்கையின் இனவாத சக்திகள் இலங்கையின் முஸ்லீம் சமூகத்தின் மீதான வெறுப்பாக மாற்றின.

இலங்கை இந்த விச சக்கரத்திலிருந்து விடுபடுவதாக இல்லை.

தமிழர்கள்இகிறிஸ்தவர்கள்இமுஸ்லீம்கள் என தொடர்கிறது. இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் தடைக்கல்லாக அமைகிறது.
இலங்கை இன மத வெறுப்பு சகதியில் இருந்து விடுபட வேண்டும.;
இதன் பேரில் அண்மைய வரலாறு முழுவதும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அதிகாரங்கள் சமூகங்களிடையே பகிரப்படவேண்டும்.

இலங்கையில் அதிகாரப்பகிர்வின் ஒரே மிச்சமான அம்சமான மாகாண சபைகளை முழுமையான அதிகாரங்களுடன் இயங்க பண்ணுவதில் விருப்பமின்மை நிலவுகிறது.

முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கோ தமிழரின் தலைவர் என வீற்றிருக்கும்; சம்பந்தருக்கோ இந்த 13வதன் அதிகாரங்களை முழுமை படுத்துவதில் எந்த அக்கறையும் கிடையாது.
சமஸ்டி -கூட்டாட்சி -சுயநிர்ணய உரிமை இவர்களை பொறுத்தவரை தேர்தல் சுலோகங்கள் மாத்திரம் தான் உள்ளார்ந்த பொருள் எதுவும் இல்லை. அதேபோல் மனித உரிமை- ஜெனிவா- பயங்கரவாத தடைச்சட்டம்- காணாமல் போனவர்கள்- சிறைகளில் வாடுபவர்கள்- சர்வதேச நீதமன்றம் பற்றியவை எல்லா அதிகாரத்தை அடைவதற்கான வெற்று சொற்சிலம்பங்கள் தான்.

அவர்களின் அரசியல் வியாபாரத்தில் இச் சொற்பிரயோகங்கள் முதலீடுகள் அவ்வளவு தான்
பல்லாயிரம் போராளிகள் லட்சம் மக்களின் மரணத்தின் பேரில் தமிழ் மக்கள் மத்தியில் இத்தகைய ஒரு மோசடி அரசியல்.

இலங்கை என்ற நாட்டரசு தொடர்ச்சியாக விதிவிலக்கான சில சந்தாப்;பங்களை தவிர சமூக பிரக்ஞை அற்ற அரசாக இயங்கியதன் விளைவு அது அராஜகமாகி ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
நாட்டை விட ஜனாதிபதி பிரதமர் இவர்களிடையே ஆன அதிகார உறவுச்சிக்கல்களே முதன்மை பெற்றுள்ளன. மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் எந்த விடயங்களும் இவர்களுக்கு விருப்பமற்றது. மக்களை புறந்தள்ளிய எல்லையற்ற அதிகாரத்தை அவாவுறுபவர்களே இலங்கையின் அரசியல் ஆதிக்க சக்திகள்.

பௌத்த மதபீடம் இலங்கையின் அரசியல் அரசு மதத்திற்கு கீழ்பட்டது என்று கருதுகிறது.
அரசும் அரசியல் தலைவர்களும் பெருமளவிற்கு தாமும் தமது குடும்பமும் உற்ற சுற்றமும் என்று இயங்குபவர்கள் நிலப்பிரபுத்துவ சாயலுடன்.

பிரக்ஞை கொண்ட அரசியல் சக்திகள் விதிவிலக்காகவே இருக்கின்றன.
ஆனால் பிரதான சிங்களஇதமிழ் தலைமைகள் அவ்வாறில்லை.

இந்த இடத்தில் தன்னலம் கருதாது சமூக மாற்றம் விளைந்து மரணித்து போனவர்களை நினைவில் இருத்துவோம.; அவர்களே அறம் சார் சமூக அமைப்பு ஒன்றிற்கான கலங்கரை விளக்காக இருந்தார்கள் .

அவர்கள் சுதந்திரத்தை நேசித்தார்கள். சமூக நீதியை -சமத்துவத்தை பால் சமத்துவத்தை சர்வதேச சகோதரத்துவத்தை நேசித்தார்கள். ஆனால் இந்த நாடு தெற்கிலும் வடக்கிலுமாக எழிலார்ந்த வாழ்வை கனவு கண்டு மரணித்தவர்களின் கனவுகளுக்கு எதிரான திசையில் பயணிக்கிறது.
நாம் வாழும்தேசங்களிலும் நாட்டிலும் பொதுவுடைமை சமூக நீதி மதச்சார்பின்மை கருத்துக்களை யுத்த எதிர்ப்பு பயங்கரவாத எதிர்ப்பு சுற்றாடல் பேண் கருத்துக்களை முன்னெடுத்து செல்ல வேண்டிய வரலாற்று கடமை இருக்கிறது.

இன்றைய அராஜக சூழ்நிலையில் ஒளிரும் பாதை ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். இதுவே மறைந்த தோழர்களுக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

தி. சுpறிதரன் சுகு
தலைவர்
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (ளுனுPவு)

Share:

Author: theneeweb