தியாகிகள் தினம் சுவிஸ்சில்!

Swiss இல் Frick என்னுமிடத்தில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT) இனரால் ஒழுங்கு செய்யப்பட்ட 29வது தியாகிகள் தினம் 30.06.2019 அன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.தோழா ஈசனின் வரவேற்புரையினைத் தொடர்ந்து தோழர் பெர்னாண்டோ தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.தியாகிகளுக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலியினைத் தொடர்ந்து தியாகிகளுக்கான மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் தியாகிகள் தின சிந்தனையாக அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையை தோழர் பத்மபிரபா வாசித்தார். அதைத் தொடர்ந்து தோழர்கள் லோலன்(நியுட்டன்),அலெக்ஸ்,மகேந்திரம், நிமல்ராஜ ஆகியோர் உரையாற்றினர்.இந்நிகழ்வில் Epdp உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Share:

Author: theneeweb