மிஹின் லங்கா – ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மோசடி தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று (02) ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று மாலை இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு 2018 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்ததுடன் இன்று அதன் அறிக்கை ஒப்படைக்கப்பட உள்ளது.

Share:

Author: theneeweb