தவறான அரசியல் கொள்கைகள் காரணமாக நாடு அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான அரசியல் கொள்கைகள் காரணமாக இன்று நாடு அபாய நிலையை முகங்கொடுத்துள்ளதாக முன்னாள் அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 7 தசாப்தங்களாக காணப்பட்ட கொள்கைகளில் தேவதை கதைகள் மாத்திரமே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர்களினால் நாட்டில் பல்வேறு பொறிகளில் சிக்க வைத்து சென்றதாகவும் தற்போது நாடு கடன் பொறியில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb