அமெரிக்காவுக்கு எதிராக ஒரு இலட்சம் முஸ்லிம்களை என்னால் திரட்ட முடியும்

ரிவி தெரணவில் நேற்று (01) இரவு ஔிபரப்பாகிய 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள தீவிரவாத குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த அவர், உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஏன் சகல முஸ்லிம்கள் மீதும் குற்றம் சாட்டுகின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவுக்கு எதிராக 1 இலட்சம் முஸ்லிம்களை தன்னால் திரட்ட முடியும் எனவும் அவ்வாறு சுமந்திரன் மற்றும் சம்பந்தனுக்கு தமிழ் மக்களை திரட்ட முடியுமா எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் சவால் விடுத்துள்ளார்.

Share:

Author: theneeweb