05 மாகாணங்களுக்கான புதிய அளுநர்கள் பதவிப்பிரமாணம்

05 மாகாணங்களுக்கான புதிய அளுநர்கள் பதவிப்பிரமாணம்
5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித போகொல்லாகம பணியாற்றினர்.

இதேவேளை, மேல் மாகாண புதிய ஆளுநராக அசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அந்தப் பதவியில் ஹேமகுமார நாணயக்கார கடமையாற்றினர்.

மத்திய மாகாண ஆளுநராக பி.பீ திஸநாயக்க கடமையாற்றிய நிலையில், மத்திய மாகாண புதிய ஆளுநராக மைத்திரி குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பதவியில் இதற்கு முன்னர் எம்.பி.ஜயசிங்க கடமையாற்றினார்.

இதேவேளை, கே.சீ. லோகேஸ்வரன் வகித்த வடமேல் மாகாண ஆளுநர் பதவிக்கு, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜெயரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், அந்த வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb