30 லட்சம் ரூபாவுடன் தப்பிச்செல்ல முயற்சித்த திருடர்களை மடக்கிப்பிடித்த பொலிசார்

அகுரஸ்ஸ நகரில் நிதி நிறுவனமொன்றில் 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர்கள் இருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நிதி நிறுவனத்துக்கு பேருந்தில் வந்த சந்தேகநபர்கள் இருவரும் அங்கிருந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

பின்னர் குறித்த நிதி நிறுவனத்திலிருந்து கைப்பற்றிய 30 இலட்சத்துக்கும் அதிகமான தொகை பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகளும் காவற்துறையினரும் இணைந்து அவர்களை தேடி கண்டுபிடித்தப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் ஹக்மன மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Author: theneeweb