பாடசாலைக்குள் பலவந்தமான நுழைய முற்பட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய படை வீரர் கைது

பாடசாலைக்குள் பலவந்தமான நுழைய முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்பு படையின் வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார் ,

அக்மீமன, உபானந்த வித்தியாலயத்திற்குள் பலவந்தமான நுழைய முற்பட்ட நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், அதில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.

இன்று பகல் 12.05 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சந்தேகநபர் பாடசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து, அவரது பணிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், 39 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Author: theneeweb