துப்பாக்கியை பறித்துச்சென்றவர்கள் கைது

மட்டக்களப்பு – புதூரில் போக்குவரத்து காவல்துறை அலுவலர் ஒருவரின் துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி உந்துருளியை செலுத்திச் சென்ற ஒருவரைக் கைதுசெய்து மட்டக்களப்பு காவல்துறை நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது போக்குவரத்து காவல்துறை அலுவலர் ஒருவரின் துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில், காவல்துறை அதிகாரிகளின் உந்துருளியுடன், மற்றுமொரு உந்துருளி மோதியுள்ள நிலையில், குறித்த இடத்தில் பிரதேச மக்கள் ஒன்றுகூடியதை அடுத்து, மோதல் நிலை ஏற்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, காவல்துறை அதிகாரி ஒருவரின் கையிலிருந்து துப்பாக்கியை சிலர் பறித்துச்சென்றுள்ளனர்.

குறித்த சபம்வத்தை எதிர்நோக்கிய மட்டக்களப்பு காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவரும் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Author: theneeweb