பயணியின்பார்வையில் -அங்கம்13 இலங்கைவடபுலத்தில்சந்தித்தஎழுத்தாளுமைகள்

 

மணிவிழாநாயகன்வித்தியாதரனுக்குவாழ்த்துக்கூறும்பதிவு 

முருகபூபதி

 

சிலவருடங்களுக்குமுன்னர்(2016ஒக்டோபர்மாதம்) மெல்பனில் வதியும் எழுத்தாளர் தெய்வீகன், என்னிடம்                       “  யாழ்ப்பாணத்திலிருந்துஒருபுதியதமிழ்ப்பத்திரிகைகாலைக்கதிர்வரவிருக்கிறது. அதன்முன்னோட்டமாகவிடியல்வீச்சுஎன்றசிறப்புமலரைவெளியிடவிருக்கிறார்கள். அதற்குஒருகட்டுரைதரமுடியுமா?“ எனக்கேட்டார்.உதயதாரகையிலிருந்துகாலைக்கதிர்வரையில்என்றதலைப்பில்ஒருகட்டுரையைஎழுதிஅனுப்பினேன்.

எனினும்மனதில்தயக்கங்கள்இருந்தன.இலங்கைவடபுலத்திலிருந்துமுன்னர்சிலபத்திரிகைகள், இதழ்கள்வெளிவந்தவண்ணமிருந்தன.

காலவெள்ளத்தாலும்காவல்காக்கவந்தவர்களினாலும்சிலபத்திரிகைகள்மறைந்தன. சிலஊடகவியலாளர்கள்கொல்லப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர். தடுத்துவைக்கப்பட்டனர்.

 

வடபுலத்திலிருந்துமுதலில்வெளிவந்தஉதயதாரகையிலிருந்துபுதிதாகவெளிவரவிருக்கும்காலைக்கதிர்வரையில்நேர்ந்தமாற்றங்கள்குறித்துஅக்கட்டுரையில்அலசியிருந்தேன்.

 

அக்கட்டுரைகிடைத்ததும்தனக்குவந்தமின்னஞ்சல்பதிலைதெய்வீகன்எனக்குஅனுப்பியிருந்தார். அக்கடிதம்:

 

தெய்வீ…

பெரியமனிதர்கள்எப்போதும்பெரியமனிதர்கள்தாம்.

முருகபூபதிஅவர்களுடையகட்டுரையும்இணைப்புப்படங்களும்பிரமாதம். உண்மையில்நான்தான்அவரிடம்தொடர்புகொண்டுகட்டுரைகேட்டிருக்கவேண்டும். தவறிவிட்டேன். எனினும்அதைப்பெரிதாகப்பொருட்படுத்தாமல், நாம்எத்தகையகட்டுரைஅவசியம்என்றுஎதிர்பார்த்தோமோஅதையேகனகச்சிதமாக – அச்சொட்டாக – தந்திருக்கிறார்அவர். கடந்தகாலதமிழ்ப்பத்திரிகைஉலகின்சரிதத்தைஇறுக்கமாகவும்சுருக்கமாகவும்யாரைக்கொண்டாவதுவரையச்செய்து, முதல்இதழில்இடம்பெறச்செய்யவேண்டும்என்றுவிரும்பினோம். உன்மூலம்மிகச்சரியான – மிகப்பொருத்தமான – தேர்ந்த – கைகள்மூலம்அதுநிறைவேறியிருக்கின்றமைபெரும்மகிழ்வைத்தருகிறது. இன்னும்ஆசிரியர்கட்டுரையைப்பார்க்கவில்லை. காலையில்வந்துவாசித்ததும்மிக்கமகிழ்ச்சிஅடைவார்.

நண்பர்முருகபூபதிஅவர்களுக்குஎன்னுடையதும்ஆசிரியருடையதும்அன்பைத்தெரிவியுங்கள்.

உங்களதும், நண்பர்முருகபூபதியினதும்முகவரிகளைஅனுப்பிவையுங்கள். எங்கள்முதலாவதுஇதழாகவெளிவரும்விடியல்வீச்சுமலரின்பிரதிகளைஅஞ்சலிடுகிறேன்.

 

அன்புடன்வித்தியாதரன்

 

இவ்வாறுதான்எனக்குவித்தியாதரனுடனும்காலைக்கதிர்பத்திரிகையுடனும்நெருக்கம்தோன்றியது.

வித்தியாதரன்இலங்கையில்கொழும்பிலிருந்துவெளியானதினபதி – சிந்தாமணிபத்திரிகைஆசிரியபீடங்களில்பணியாற்றியவர். பின்னாளில்யாழ்ப்பாணத்திலிருந்துவெளியானஉதயன்மற்றும்கொழும்பிலிருந்துவெளியானசுடரொளிஆகியனவற்றிலும்பணியாற்றியிருப்பவர்.

2009  காலப்பகுதியில்எதிர்பாராதவகையில்கைதாகிஎதிர்பாராதவகையில்உயிர்தப்பிவந்தவர். அச்சமயம்அவரதுகைதுகுறித்துவெளியானகண்டனங்களையும்அன்றையஅரசுக்குவந்தஅழுத்தங்களையும்அறிவேன்.

வீரகேசரிகுழுமத்தில்பணியாற்றிக்கொண்டிருந்தஊடகத்துறைநண்பர்கள்வீரகத்திதனபாலசிங்கம், வடிவேல்தேவராஜாஆகியோர்வித்தியின்கைதுதொடர்பாகதெரிவித்தஆட்சேபங்களையும்நான்வதியும்அவுஸ்திரேலியாஅரசவானொலிஎஸ்.பி. எஸ்ஊடகத்திலும்கேட்டிருக்கின்றேன்.

எந்தவொருதுறையிலும்உள்ளார்ந்தஆற்றல்மிக்கவர்கள்எங்குவாழ்ந்தாலும், எத்தகையஇடர்களை, சவால்ளைஎதிர்கொண்டாலும், தங்கள்பணியிலிருந்துபின்வாங்கமாட்டார்கள். அதற்குநண்பர்வித்தியாதரனும்ஒருஉதாரணம்.

எனதுஆக்கம்கிடைத்ததும்அவர்எழுதியிருந்தபதில்அவர்மீதுஎனக்கிருந்தமதிப்பைமேலும்உயர்த்தியது.

வயதால்அவர்என்னைவிடஇளமையானவர். ஆனால், ஊடகத்துறையில்நான்சந்திக்காதபலகஷ்டங்களைஅனுபவித்தவர்.  அவர்உயிர்மீண்டுவந்ததுஅதிசயமே!

இலங்கையில்தமிழ் – சிங்கள – முஸ்லிம்ஊடகவியலாளர்களுக்குஎன்னநடந்தது? என்னநடக்கிறது? என்பதைதொலைவிலிருந்துஅவதானித்துவருகின்றேன்.

ண்பர்வித்தியாதரனுக்குஇந்தஆண்டுமணிவிழாக்காலம். அவரைவாழ்த்திக்கொண்டேஇந்தபயணியின்பார்வையில்தொடரின்13ஆவதுஅங்கத்திற்குவருகின்றேன்.

காலைக்கதிர்2016ஆம்ஆண்டுஇறுதிமுதல்பலசிரமங்களுக்குமத்தியில்தங்குதடையின்றிதொடர்ந்துவெளியாகிறது. வெளிநாடுகளில்வதியும்வாசகர்களுக்காகஇலங்கைநேரம்நடுச்சாமத்திலேயேமின்னஞ்சல்ஊடாகபுறப்பட்டுவந்துவிடுகிறது.

பத்திரிகைகளில்இலங்கையின்மூவினஅரசியல்தலைவர்கள்காலத்துக்குக்காலம்தெரிவிக்கும்கருத்துக்கள்காலத்துக்குகாலம்மாறிக்கொண்டிருந்தாலும், பத்திரிகைகளின்ஊடகதர்மம்மாறுவதில்லை!

விடியலின்வீச்சுவெளியீட்டுவிழாவிலும்அதற்குமுன்னர்வித்தியாதரன்எழுதியஎன்எழுத்தாயுதம்நூல்வெளியிட்டுஅரங்கிலும்அரசியலில்எதிரும்புதிருமாகஇருந்தவர்களும்தோன்றியிருக்கிறர்கள். அவர்கள்அனைவருடனும்எந்தஎதிர்ப்போ-  எந்தப்புதிருமோஇல்லாமல்உறவைப்பேணிக்கொண்டேபத்திரிகைக்கானசெய்திவேட்டையில்சாமர்த்தியசாலிதான்வித்தியாதரன்என்பதுஎனதுஅவதானம்.

இந்தப்பயணத்தில்நான்யாழ்ப்பாணத்தில்சிலமணிநேரங்கள்தான்நின்றேன்.

அன்றுமார்ச்02 ஆம்திகதிசனிக்கிழமையாழ். அரசாங்கசெயலகமாநாட்டுமண்டபத்தில்இலங்கைமாணவர்கல்விநிதியத்தின்நிகழ்ச்சிகளைமுடித்துக்கொண்டுயாழ். நல்லூர்நாவலர்மண்டபத்திற்குவந்தோம்.

காலைக்கதிர்ஆசிரியர்வித்தியாதரன்வழங்கியஆதரவினாலும்ஊக்கத்தினாலும், அவருடையபத்திரிகையில்இதுவரையில்மூன்றுதொடர்களைஎழுதியிருக்கின்றேன்.

முன்னோட்டமாகவெளியிட்டவிடியலின்வீச்சில்எழுதியதையடுத்து, இலங்கையில்பாரதிஎன்ற 40 அத்தியாயங்கள்கொண்டநீண்டதொடரை( 40வாரங்கள்) காலைக்கதிரில்எழுதியிருந்தேன்.

அதனையடுத்து, சொல்லத்தவறியகதைகள்தொடரில் 20 அங்கங்கள்( 20வாரங்கள் ) எழுதியிருக்கின்றேன். அதனையடுத்துகாலமும்கணங்களும்என்றதொடரையும்சிலவாரங்கள்எழுதியிருக்கின்றேன்.

சொல்லத்தவறியகதைகளில்இடம்பெற்றஅங்கங்கள்சிலஜெர்மனிதேனீ – கனடாபதிவுகள் – அவுஸ்திரேலியாதமிழ்முரசு – அக்கினிக்குஞ்சுஇலங்கைதினக்குரல்முதலானஊடகங்களிலும்வந்துள்ளன.  கிளிநொச்சியில்வதியும்நண்பர்கருணாகரன்தனதுமகிழ்பதிப்பகத்தினால்அதனைவெளியிட்டிருந்தார்.அதற்கானமுகப்போவியத்தைசிட்னியில்வதியும்கலைஇலக்கியவாதிகீதாமதிவாணன்வரைந்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலும்அதனைஅறிமுகப்படுத்துவதில்கருணாகரன்அக்கறைகொண்டிருந்தார்.

அவரதுஏற்பாட்டில்எமதுயாழ்ப்பாணம்சிறுவர்அபிவிருத்திநிலையஅலுவலர்கள்அந்தநிகழ்ச்சியைமுன்னின்றுநடத்தினார்கள்.

அந்தத்தொடர்வெளிவந்தகாலைக்கதிர்ஆசிரியர்வித்தியாதரனேநிகழ்ச்சிக்குவந்துவெளியிட்டுவைக்கவேண்டும்எனநான்விரும்பியிருந்தவாறுஅவரும்வந்திருந்தார்.

ஜீவநதிவெளியீடாகமுன்னர்வந்திருந்தஎனதுசொல்லவேண்டியகதைகள்நூல்பற்றிகோகிலாமகேந்திரனும்சொல்லத்தவறியகதைகள்நூல்பற்றிகவிஞர்சோ. பத்மநாதனும்உரையாற்றினர்.

இலக்கியவாதியும்யாழ். மகாஜனாக்கல்லூரியின்ஆசிரியருமானசிதம்பரநாதன்ரமேஷ்நிகழ்ச்சிகளைஒருங்கிணைத்தார்.இவர்கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலனின்உறவினர்எனவும்பேராசிரியர்எம். ஏ. நு.ஃமானின்மாணவர்எனவும்கருணாகரன்சொல்லித்தான்தெரிந்துகொண்டேன்.

யாழ்ப்பாணத்தில்வதியும்கலை, இலக்கியவாதிகளானபலர்எனதுநீண்டகாலநண்பர்கள். இவர்களுடனானநட்புறவுஇற்றைவரையில்எந்தவொருவிக்கினமுமில்லாமல்தொடருகிறது.

அதனால்நண்பர்கருணாகரனும்நானும்விடுத்தஅழைப்பைஏற்றுபலரும்வருகைதந்துஒன்றுகூடினர். அவர்கள்வதியும்இல்லங்களுக்குநேரில்சென்றுசந்தித்துஉரையாடுவதற்குநேரஅவகாசம்இல்லாதமையினால்அத்தகையஒருசந்திப்பையேநான்பெரிதும்விரும்பினேன்.

எனதுநூல்களின்அறிமுகத்தைவிட, அவர்களைநேருக்குநேர்பார்த்துஉரையாடுவதுதான்மனதிற்குநிறைவானது.

கோகிலாமகேந்திரன், சோ. பத்மநாதன், வித்தியாதரன், டான்தொலைக்காட்சிகுகநாதன், தேசியகலைஇலக்கியப்பேரவையைச்சேர்ந்ததணிகாசலம், அ. யேசுராசா, சட்டநாதன், நீலாம்பிகை, சித்தாந்தன், ரவிவர்மா, வன்னியகுலம், வதிரிசி. ரவீந்திரன், கொற்றாவத்தைகிருஷ்ணானந்தன், பேராசிரியர்கள்சிவச்சந்திரன், சிவலிங்கராஜாஉட்படபலர்வந்திருந்தனர்.

அத்துடன்,அக்காலப்பகுதியில்அவுஸ்திரேலியாவிலிருந்துஅங்கேவந்திருந்தநண்பர்இராஜரட்ணம்சிவநாதன், லண்டனிலிருந்துராகவன், பிரான்ஸிலிருந்துஅன்டனிப்பிள்ளைராயப்பு( அழகிரி) தம்பதியர்ஆகியோரும்இந்நிகழ்ச்சியில்கலந்துசிறப்பித்தனர்.

கோகிலாமகேந்திரன்எழுத்தாளராகவும்சீர்மியத்தொண்டராகவும்இரண்டுதளங்களில்இயங்கிவருபவர்.  உளவியல்ரீதியாகவும்இலக்கியப்பிரதிகள்எழுதுபவர்.

சொல்லவேண்டியகதைகள்நூலில்இடம்பெற்றதனிமையிலேஇனிமைஎன்றஅங்கம்குறித்துசிலாகித்துப்பேசினார்.

அந்தஅங்கத்தில்அவரும்நன்கறிந்தசிலஎழுத்தாளுமைகளின்அந்திமகாலத்தின்தனிமைபற்றிநான்பதிவுசெய்திருந்ததும்அதற்குஒருகாரணமாகஇருக்கலாம்.

கவிஞர்சோ. பத்மநாதன்ஈழத்துஇலக்கியஉலகில்கவிதை, மொழிபெயர்ப்புத்துறையில்ஆளுமையாகபோற்றப்படுபவர். கொண்டாடப்படுபவர்.  அன்றையசந்திப்பில்அவர்மொழிபெயர்த்துஎழுதியதென்னாசியக்கவிதைகள்நூலைஎனக்குத்தந்தார்.

இந்நூல்பற்றியசுருக்கமானகுறிப்பினைஇந்தநூலிலிருந்தேதருகின்றேன்.

“ இத்தொகுதியில்அடங்கியுள்ள86கவிதைகளும்சார்க்நாடுகளைச்சேர்ந்த65கவிஞர்களால்ஆக்கப்பட்டவை. இப்பிராந்தியத்துநவீனகவிதைமுயற்சிகள்   “கொமன்வெல்த் “ எனத்தொடங்கி,  “பின்காலனியக்கவிதை  “எனவளர்ந்து, இன்றுஉலகக்கவிதைஎனமலர்ந்துள்ளன.

அந்நியர்ஆட்சியுள்அகப்பட்டுஅடையாளமிழந்தசார்க்நாடுகள்இருபதாம்நூற்றாண்டின்நடுப்பகுதியில்மெல்லமெல்லவிடுதலைபெற்றுநிமிர்ந்தபோதும், சாதிசமயமோதல்களுக்கும்ஏழ்மை ,அறியாமை, சுரண்டல், பெண்ணடிமைஎனப்புதியசவால்களுக்கும்எவ்வாறுமுகம்கொடுத்துவந்துள்ளனஎன்பதைஇக்கவிதைகள்பேசுகின்றன. எல்லைகள்தாண்டிஇக்கவிக்குரல்கள்ஒலிப்பதுகாலத்தின்தேவை.

ழுத்துலகில்சோ. பா.எனஅறியப்பட்டசோ. பத்மநாதன்கவிஞராக, பேச்சாளராக, மொழிபெயர்ப்பாளரகதம்பெயர்நிறுவியவர். சொந்தக்கவிதைகள்மூன்றுதொகுதிகளும்இசைப்பாக்களாகஐந்துஇறுவட்டுக்களும்வெளியிட்டவர்.

ஆங்கிலத்திலிருந்துதமிழுக்குஇரண்டுகவிதைத்தொகுதிகளும்ஃபிரெஞ்சிலிருந்துதமிழுக்குஒருநெடும்பாவும்இவர்மொழிபெயர்ப்புகள்.

பர்மியப்பிக்குசொன்னகதைகள்சாகித்தியவிருதுபெற்றமொழிபெயர்ப்பு.

Sri Lankan Tamil Poetry , Tamil Short Stories from Sri Lanka என்பனவும்குழந்தை ம. சண்முகலிங்கத்தின்நாடகங்களும்சோ.ப. ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவை.

SAARC இலக்கியவிழாக்களில்நான்குமுறைகலந்துகொண்டசோ.ப. Goethe Instituteஎன்றஜேர்மன்கலாசாரமையத்தினால்51 தென்னாசியகவிஞர்களில்ஒருவராகஇனங்காணப்பட்டு, Poets  Translating Poetsவிழாவுக்குஅழைக்கப்பட்டவர்.

சோ.ப.வின்தென்னாசியக்கவிதைகள்நூலில்இலங்கைசிங்களஎழுத்தாளர்களின்கவிதைகளும்இடம்பெற்றுள்ளமைகுறிப்பிடத்தகுந்தது.

அதனால்அண்மையில்எமதுஅவுஸ்திரேலியாதமிழ்இலக்கியகலைச்சங்கம்மெல்பனில்நடத்தியதமிழ் – சிங்களஇலக்கியப்பரிவர்த்தனைதொடர்பானகருத்தரங்கைமுன்னிட்டுஒழுங்குசெய்யப்பட்டகண்காட்சியிலும்இந்தநூலைஇடம்பெறச்செய்தேன்.

இந்தநூலைகொழும்பில்எஸ். கொடகேசகோதரர்கள்பதிப்பகம்வெளியிட்டுள்ளது. இந்தநூல்பற்றிகனடாவில்வதியும்எழுத்தாளர்தேவகாந்தன்விரிவானமதிப்பீட்டைகனடாபதிவுகள்இணையத்தில்சிறப்பாகஎழுதியுள்ளார்.அதனைஇந்தஇணைப்பில்காணலாம்.

http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4640:2018-07-31-03-12-27&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74

அன்றையநிகழ்ச்சியில்எனதுசொல்லத்தவறியகதைகள்நூலில், விடுதலைப்போராட்டங்களில்உறைபொருளும்மறைபொருளும்- என்றஅங்கத்தில்இடம்பெற்றகலெக்டர்ஆஷ்துரை –  உரும்பராய்சிவகுமாரன்பார்வையில்சாதிஅமைப்புதொடர்பானஒப்பீட்டைசோ.ப.  சிலாகித்துப்பேசினார்.

நூல்களின்சிறப்புபிரதிகளைகாலைக்கதிர்ஆசிரியர்வித்தியாதரன்வெளியிட்டுவைக்க, டான்தொலைக்காட்சிஇயக்குநர்குகநாதன்பெற்றுக்கொண்டார்.

அந்தஇனிமையானமாலைநேரச்சந்திப்பைமுடித்துக்கொண்டு, அன்றுஇரவேகிளிநொச்சிக்குப்பயணமானேன்.

( தொடரும்)

 

Share:

Author: theneeweb