அக்மீமன சம்பவம்; இராணுவத்தால் விசாரணை ஆரம்பம்

பாடசாலைக்குள் பலவந்தமான நுழைய முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவப் படையின் வீரர் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறினார்.

அண்மையில் அக்மீமன, உபானந்த வித்தியாலயத்திற்குள் பலவந்தமான நுழைய முற்பட்ட நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், அதில் தந்தை ஒருவர் உயிரிழந்தார்.

பின்னர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய இராணுவப் படை வீரர் பொலிஸாரா் கைது செய்யப்பட்டார்.

காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் பூஸ்ஸ முகாமின் 581 வது படைப்பிரிவில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இராணுவத்தினரும் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறினார்.

Share:

Author: theneeweb