இராணுவ ஜீப் வாகனம் விபத்துக்குள்ளானதில் – இராணுவத்தினர் 10 பேர் படுகாயம்

சம்மாந்துறை காவல் துறை பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் அல்லிமுல்லை பகுதியில் இடம்பெற்ற வீ;தி விபத்தில் இராணுவத்தினர் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலையில் இ;டம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் பயணித்த இராணுவ ஜீப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதிலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த ஜீப் வாகனம் சென்றுக்கொண்டிருந்த வேளையில் மாடுகள் வீதியை குறுக்கிட்டமையினால் வாகனத்தை வீதியின் கரைக்கு திருப்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இராணு வீரர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உள்ளிட்ட மூன்று வைத்தியசாலைகளில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb