படித்தோம்சொல்கின்றோம்: கவிஞர்அம்பிஅகவை90பாராட்டுவிழாமலர் – முருகபூபதி

 

“ அன்புக்கோர்அம்பி  “ யின்ஆளுமையைப்பற்றிபேசும்ஆவணம்

முருகபூபதி

 

சமூகத்தில்கல்வி, கலைஇலக்கியம், ஊடகம்,  மருத்துவம், அரசியல், பொதுநலத்தொண்டுமுதலானதுறைகளில்ஆளுமைகளாகவிளங்கியிருப்பவர்கள்குறித்தபதிவுகள்பெரும்பாலும்அவர்களின்மறைவுக்குப்பின்பேஅஞ்சலிக்குறிப்புகளாகவெளிவருகின்றன.

தற்காலமின்னியல்ஊடகத்தில்வலிமையானதொடர்பாடலாகவிளங்கும்முகநூலில்அத்தகையசிறுகுறிப்புகளைபதிவேற்றிவிட்டு, உள்ளடங்கிப்போகின்றகலாசாரம்வளர்ந்திருக்கிறது.

அவைபெரும்பாலும்எழுதப்படுபவருக்கும்மறைந்தவருக்கும்இடையேநிலவியஉறவுகுறித்தேஅதிகம்பேசும்.

ஆனால், மறைந்துவிட்டவர்அவற்றைபார்க்காமலேயேநிரந்தரஉறக்கத்தில்அடக்கமாவார். அல்லதுதகனமாவார்.

இந்தத்துர்ப்பாக்கியம்காலம்காலமாகஎல்லாசமூகஇனத்தவர்களிடமும்நிகழ்ந்துவருகிறது.

ஒருஇலக்கியபடைப்பாளிமறைந்துவிட்டால், அதுவரையில்அவர்எழுதியஎழுத்துக்களைபடிக்காதவரும்அவற்றைத்தேடிஎடுத்துப்படிக்கச்செய்யும்வகையில்சிலரதுஅஞ்சலிக்குறிப்புகள்அமைந்துவிடும்.

ஒருஆளுமையைவாழும்காலத்திலேயேகனம்பண்ணிபோற்றிபாராட்டிவிழாஎடுப்பதையும்அதற்காகசிறப்புமலர்வெளியிடுவதையும்மேற்குறித்தபின்னணிகளிலிருந்துதான்அவதானிக்கவேண்டியிருக்கிறது.

அவுஸ்திரேலியா- சிட்னியில்சுமார்மூன்றுதசாப்தகாலமாகவதியும்ஈழத்தின்மூத்தகவிஞர்அம்பிஅவர்கள்ஆசிரியராகவும்பாடவிதானஅபிவிருத்தியில்நூலாக்கஆசிரியராகவும்படைப்பிலக்கியவாதியாகவும்ஆய்வாளராகவும்தமிழ்உலகில்அறியப்பட்டவர்.

அகவைதொன்னூறைநிறைவுசெய்துகொண்டு, ஏறினால்கட்டில்இறங்கினால், சக்கரநாற்காலிஎனவாழ்ந்துகொண்டுகடந்தகாலங்களைநனவிடைதோய்ந்தவாறுசிட்னியில்வசிக்கின்றார்.

அவருக்கு 90வயதாகிவிட்டதுஎனஅறிந்ததும், சிட்னியில்வதியும்கலை, இலக்கிய, ஊடகத்துறைசார்ந்தவர்கள்ஒன்றிணைந்துவிழாஎடுத்தனர்.

விழாவில்காற்றோடுபேசிவிட்டுச்செல்லாமல், ஒருசிறப்புமலரையும்வெளியிட்டு, கவிஞர்அம்பியின்பன்முகஆளுமைப்பண்புகளைபதிவுசெய்துள்ளனர்.

இச்செயல்முன்மாதிரியானது. ஒருவர்வாழும்காலத்திலேயேபாராட்டிகௌரவிக்கப்படல்வேண்டும்என்றஎண்ணக்கருவைசமூகத்தில்விதைக்கும்பண்பாட்டினையும்கொண்டிருப்பது.

அதற்காகமுன்னின்றுஉழைத்தவர்களைபாராட்டியவாறேமலருக்குள்பிரவேசிப்போம்.

இம்மலரைஅவுஸ்திரேலியாவில்தமிழர்மத்தியில்நன்கறியப்பட்டஞானம்ஆர்ட்ஸ்பதிப்பகத்தின்சார்பில்ஞானசேகரம்சிறீறங்கன்அழகாகவடிவமைத்துள்ளார்.

“ பன்முகஆளுமைஅம்பிஐயாவைவாழ்த்தவயதில்லை! வணங்குகிறோம்“என்றதலைப்பில்மலருக்கானமுன்னுரைஎழுதப்பட்டுள்ளது.

தமிழ்க்கலைச்சொல்லாக்கத்தில்பங்களிப்பு – உலகத்தமிழ்ஆராய்ச்சிமாநாடுகளில்ஆய்வுசமர்ப்பித்தல் – தமிழில்விஞ்ஞான – கணிதஆசிரியர் – தமிழ்குழந்தைபாடல்களுக்காகபெயர்பெற்றகுழந்தைஇலக்கியவாதி–தமிழில்மருத்துவம்கற்பிக்கப்புறப்பட்டமருத்துவர்சமூவேல்கிறீன்பற்றியஆய்வுமுதலானபணிகளில்அம்பிஅவர்கள்மேற்கொண்டமுயற்சிகள்குறித்துஇந்தமுன்னுரைபேசுகிறது.

அம்பியைப்போலவேதாயகம்விட்டுபுறப்பட்டு, தற்போதுபிரான்ஸில்அம்பியைப்போலவேபடுக்கையிலிருந்தவாறுகடந்தகாலங்களைமனதில்அசைபோட்டுக்கொண்டிருக்கும்ஈழத்தின்மூத்தகலைஞர்அ. இரகுநாதன்நாடக, கூத்து, திரைப்படக்கலைஞர்.  “என்அம்பித்தம்பிக்குஅகவை90 வாழ்த்துக்கள்“என்னும்தலைப்பில்1970ஆம்ஆண்டுமுதல்அம்பியுடன்தனக்கிருந்தஉறவுகுறித்துப்பேசுகிறார்.

இந்தப்பதிவுஇரகுநாதனின்பழையநினைவுகளைஇக்காலதலைமுறைக்குஎடுத்துக்கூறுகிறது.

அம்பியுடன்தொடர்ந்தபயணம்என்றஆக்கத்தில்,  அம்பிக்கேஉரித்தானஅங்கதச்சுவைகொண்டஇயல்புகளைஇனம்காண்பிக்கும்முருகபூபதியின்பதிவுஇடம்பெற்றுள்ளது.

“ அம்பிசேர்என்னைஆசிர்வதியுங்கள்  “  எனச்சொன்னால்,                  “ ஆசிஉமக்கு – வாதம்எனக்கு  “ என்றுசொல்லும்அம்பியின்நகைச்சுவைபதச்சோறு.

எங்கள்தங்கக்கவிஞர்என்றதலைப்பில்இலங்கையின்மூத்ததமிழ்ஊடகவியலாளரும்தற்போதுகனடாவில்தமிழர்தகவல்என்னும்இதழைநீண்டகாலமாகவெளியிட்டுவருபவருமானஎஸ். திருச்செல்வம்தனக்கும்அம்பிக்கும்இடையேநீடித்திருந்தஉறவைப்பற்றிபேசுகிறார். இவர்கள்இருவருக்கும்இடையேநீடிக்கும்நட்புக்குஅரைநூற்றாண்டுகாலமாகிறது. அம்பியின்உலகளாவியதமிழர்என்றநூலைவெளியிட்டிருக்கும்எஸ். திருச்செல்வம், கனடாரொரன்றோநகரசபைஅங்கத்தவர்சபாபீடத்திலேபலவருடங்களுக்குமுன்னர்அம்பியைஅழைத்துபாராட்டிவிருதும்வழங்கியதகவல்களைதெரிவிக்கின்றார்.

“ அம்பி, சம்புகுண்டம், நான்கரதண்டம். அதாவதுஇருவரும்அயல்கிராமங்களானநாவற்குழியையும்கைதடியையும்சேர்ந்தவர்கள். சுற்றிவளைத்துப்பார்த்தால்உறவினர்களும்கூட. இருந்தாலும்நாங்கள்சந்தித்துக்கொண்டது8725 கிலோமீட்டர்களுக்குஅப்பால், அதுவும்சிட்னியில்2002ஆம்ஆண்டுஎன்றுதனதுமனப்பதிவுகளைமுன்வைக்கிறார்பேராசிரியர்ஆசி. கந்தராஜா.

“  மனிதவாழ்வில்தொண்ணூறுவயதுமுதுமைஎன்பதுசற்றுசிரமமானது. ஆனாலும்அவர்ஆண்டவனால்ஆசீர்வதிக்கப்பட்டஅதிர்ஸ்டசாலிஎன்றேசொல்லவேண்டும். அதற்குக்காரணம்அவரதுஒரேமகன்திருக்குமார்.தனதுதந்தையைஇன்றுவரைஅவர்தன்னுடன்வைத்துசகலபணிவிடைகளையும்சிறப்பாகச்செய்துபராமரிக்கின்றார். இக்காலத்தில்இதுமிகஅரிது ..“  என்றுஇந்தப்பதிவில்அம்பியைப்பற்றிமாத்திரமின்றிஅம்பியின்ஏகபுதல்வன்திருக்குமாரின்பண்புகளையும்விதந்துபோற்றுகிறார்கந்தராஜா.

இலங்கையில்வதியும்தகைமைசார்பேராசிரியர்எம். ஏ.நுஃமான்தனதுஆக்கத்தில்,  “நீலாவணன், மஹாகவி,முருகையன்போல்நேரடியாகவோ, மறைமுகமாகவோஅம்பிஎன்மீதுசெல்வாக்குசெலுத்தாதுவிடினும்அம்பியைஎனதுமுன்னோடிகளில்ஒருவர்என்றுகொண்டாடுவதில்எனக்குஎவ்விதசங்கடமும்இல்லை  “எனச்சொல்கிறார்.

இலக்கியவாதியும்அகிலஇலங்கைகம்பன்கழகத்தின்ஸ்தாபகர்களில்ஒருவரும்சிட்னியில்தமிழ்க்கல்விநிலையஆசிரியருமானதி. திருநந்தகுமார், தனக்கும்அம்பிக்கும்இடையமுதல்அறிமுகம்ஏற்பட்டகாலம்முதல்பின்னாளில்அவருடன்இணைந்துமேற்கொண்டதமிழ்ப்பணிகள்குறித்தும்தனதுபதிவில்விரிவாகச்சொல்கிறார்.

அம்பிஉடல்நலக்குறைவாகஇருந்தகாலப்பகுதியில்மருத்துவமனையில்அவரைச்சுற்றியிருந்தமருத்துவஉபகரணங்கள், குழாய்களைப்பற்றியும்சொல்லும்இந்தப்பதிவு ,அவரதுகுரலில்ஏற்பட்டமாற்றம்பற்றியும்பேசுகிறது.

பெண்கள்பூப்புஅடைவதைப்போன்றதுதான்ஆண்களுக்குஇளமைப்பருவத்தில்வரும்குரல்மாற்றம்எனச்சொல்வார்கள். அப்படிப்பார்த்தால், அம்பிதனது90வருடவாழ்வில்இரண்டுதடவைதனதுகுரலைமாற்றிக்கொண்டவர்என்றுசொல்லத்தோன்றும்விதமாகஇந்தஆக்கம்அமைந்துள்ளது.

மனிதநேயஇலக்கியவாதிகவிஞர்அம்பிஎன்றதலைப்பில்எழுத்தாளர்மாத்தளைசோமுஎழுதியிருக்கும்ஆக்கத்தில், அம்பியின்நல்லியல்புகளைப்பற்றிபேசுகின்றார்.

அம்பிவிஞ்ஞானஆசிரியர்என்பதையும்நினைவுபடுத்தும்மாத்தளைசோமு, சிறுகதைகள்மூலம்எழுத்துலகில்கால்வைத்தஅம்பி, கவிதைகளைஎழுதத்தொடங்கியதால், ஈழத்துஇலக்கியஉலகம்சுஜாதாபோன்றவிஞ்ஞானச்சிறுகதைஎழுதும்ஒருவரைஅடையமுடியவில்லைஎன்றஆதங்கத்தையும்சுட்டிக்காண்பிக்கின்றார்.

அம்பியிடம்விசித்திரமானகுணம்ஒன்றிருக்கிறது. எவரைப்பற்றியும்அறிந்துவைத்திருந்துமுதல்முதலில்தொலைபேசியில்தொடர்புகொண்டுபேசும்போது,  “நான்சுப்பிரமணிபேசுகின்றேன்  “ எனச்சொல்லிமறுமுனையிலிருப்பவரைதிகைப்பில்ஆழ்த்துவார்.

இந்தஅனுபவம்முன்னர்சிறிதுகாலம்அம்பியைப்போன்றுபாப்புவாநியூகினியில்வாழ்ந்தகுலசிங்கம்சண்முகம்அவர்களுக்கும்கிட்டியிருக்கிறது.

அம்பியைவாழ்த்திஎழுதியிருக்கும்குலசிங்கம்சண்முகம்பாப்புவாநியூகினியிலிருந்துசிட்னிவரையில்தங்கள்இருவருக்கும்இடையிலிருந்தநல்லூறவுபற்றிஎழுதியிருக்கிறார்.

( அண்மையில்கான்பராஇலக்கியவட்டம்அங்குநடத்தியஇலக்கியவிழாவிலும்அம்பிகுறித்துபேசியவர்தான்இந்தகுலசிங்கம்சண்முகம்என்பதுகுறிப்பிடத்தகுந்தது. )

சிட்னியில்வதியும்இளம்தலைமுறையைச்சேர்ந்தவர்திருமதிநிஷேவிதாஅஷ்வின்.  இவர்இங்குதனதுமாணவப்பருவத்தில்தமிழ்கற்றவர். தமிழ்மருத்துவமுன்னோடிகிறீன்பற்றிஅம்பிஎழுதியஆய்வுநூல்தொடர்பாகதனதுபார்வையைச்சொல்கிறார். இந்தநூலைஅம்பியேஆங்கிலத்திலும்எழுதியிருந்தார்.

“ பிறநாட்டுநல்லறிஞர்சாத்திரங்கள்தமிழ்மொழியில்பெயர்த்தல்வேண்டும் “என்றமகாகவிபாரதியின்கூற்றைதனதுபணிகளின்மூலம்அம்பிஅவர்கள்மெய்ப்பித்திருப்பதாகநிஷேவிதாநிறுவுகின்றார்.

இலங்கைரூபவாகினிகூட்டுத்தாபனத்தின்தமிழ்ச்சேவையின்முன்னாள்பணிப்பாளர்எஸ்விஸ்வநாதனும்அம்பியின்ஒருமுன்னாள்மாணவர். இவரும்இம்மலரில்தனக்கும்அம்பிக்கும்இடையே1960 முதல்ஆரம்பித்தஉறவைப்பற்றிக்கூறும்போது, வானொலிமற்றும்பத்திரிகை, இதழ்களில்அம்பியின்குறிப்பிடத்தகுந்தபங்களிப்புகளைநினைவுகூர்ந்துள்ளார்.

அம்பி, யாழ் – தெல்லிப்பழையூனியன்கல்லூரியிலும்ஆசிரியராகபணியற்றியிருப்பவர். அக்கல்லூரிக்கானகீதம்இயற்றியதும்அம்பிதான்.  200 ஆண்டுகாலபழைமையானஇக்கல்லூரிக்குஇலங்கையிலும்தமிழர்புலம்பெயர்ந்தநாடுகளிலும்பழையமாணவர்சங்கங்கள்இயங்குகின்றன.

அக்கீதத்தில்“வாழ்வுக்கிலக்கியமாய்வளர்ச்சிக்கிலக்கணமாய்    “என்றுஒருவரிவருகிறது. இதுபோன்றுஅம்பியும்வாழ்வாங்குவாழ்வார்என்றுஎழுதுகிறார்சிட்னியில்இயங்கும்கல்லூரியின்பழையமாணவர்சங்கத்தின்தலைவர்நாகரட்ணம்சுகிர்தன்.

இக்கல்லூரியில்அம்பியுடன்பணியாற்றியிருக்கும்ஓய்வுபெற்றமுன்னாள்பிரதிஅதிபர்வி. குணரட்ணம்அவர்கள்எழுதியிருக்கும்ஆக்கம்சுருக்கமாகஇருந்தாலும்கனதியாகவும்கருத்தாழத்துடனும்அமைந்துள்ளது.

இதில்வரும்வரிகளைபாருங்கள்.  “ பத்துவயதுபால்யம்- இருபதுவயதுவாலிபம்–முப்பதுவயதுமூர்க்கம்–நாற்பதுவயதுநாட்டம் – ஐம்பதுவயதுஅயதி- அறுபதுவயதுஆட்டம் – எழுபதுவயதுஓட்டம். இதற்கும்மேலானஒவ்வொருவயதும்ஆண்டவன்அளிக்கும்அன்பளிப்புஎன்றேகருதவேண்டும்  “என்றுசொல்கிறார். அவருடையதுமட்டுமல்லபட்டுத்தெளிந்தஅனைவரதும்வாழ்வியல்அனுபவம்தான்இது!

அம்பிதான்தரிசித்தபுகலிடவாழ்வுக்கோலங்களைதனதுகுறும்பாக்கள்ஊடாகசித்திரித்தவர்.  அவற்றில்சிலவற்றைஇம்மலரில்ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்யசோதாபத்மநாதன்.அவற்றிலும்சுவாரசியங்கள்நிறைந்துள்ளன.

ஒருகுறும்பாவைபாருங்கள்:

நாலுமுழவேட்டியுடன்றோட்டில் – நான்

நடமாடவழியில்லைவாழ்விந்தக்கூட்டில்!

காலையில்  “வோர்க்குக்குப் “போகில் – நீ

களிசானைமாட்டென்றவிதியிந்தவீட்டில் !

புகலிடத்தில்தமிழினஅடையாளம்வேண்டிநிற்கும்அம்பியின்ஆதங்கத்தைஆழமாகஆராய்கிறார்யசோதாபத்மநாதன்.

யூனியன்கல்லூரியில்அம்பியின்அடிச்சுவடுகள்பற்றிபேசுகிறதுDr.எஸ். ஞானராஜனின்ஆக்கம்.

அவுஸ்திரேலியத்தமிழ்எழுத்தாளர்விழாக்கள்தொடக்ககாலத்தில்( 2001 – 2003)இரண்டுநாட்கள்நடந்திருக்கின்றன.

இரண்டாம்நாளில்ஒடியல்கூழ்விருந்துடன்அம்பிதலைமையில்நடக்கும்கவிதாவிருந்துகளைநினைவூட்டுகிறதுநடராசாகருணாகரனின்கட்டுரை.

ஊடகங்களுடன்இணைந்துநின்றஅம்பியைப்பற்றியதனதுஅனுபவங்களைநியூசிலாந்துஒளிபரப்பாளர் – ஊடகவியலாளர்எஸ். எம். வரதராஜன்எழுதியுள்ளார்.

கொஞ்சும்தமிழ்தந்துநெஞ்சம்கவர்ந்தகவிஞர்என்றதலைப்பில்ப்ரணீதாபாலசுப்பிரமணியம், குழந்தைஇலக்கியத்தில்அம்பியின்வகிபாகம்பற்றிஎழுதுகிறார்.

1966ஆம்ஆண்டில்கோலாலம்பூரில்நடந்தஉலகத்தமிழ்ஆராய்சிமாநாட்டில்அம்பிசமர்ப்பித்தஆய்வேடுபற்றிநினைவுபடுத்துகிறார்பனைஅபிவிருத்திச்சபையின்தலைவர்ஆ. ந. இராசேந்திரன்.

கவிஞர்கள்செளந்தரிகணேசன், செ. பாஸ்கரன், இளமுருகனார்பாரதிஆகியோரதுகவிதைகளும்இடம்பெற்றுள்ளஇம்மலரில், அம்பியின்செல்லப்பேத்திதிருமதிஅஷ்வினிசாம்ஜியும்ஆங்கிலத்தில்தனதுஅம்மப்பாபற்றிஎழுதியுள்ளார்.

அம்பியின்வாழ்வும்பணிகளும்சம்பந்தமானகாட்சிகளைசித்திரிக்கும்பலவண்ணப்படங்களும்இம்மலரைஅலங்கரிக்கின்றன.

விளம்பரங்கள்அனைத்திலும்அம்பியின்கவிதைவரிகள்இடம்பெற்றுள்ளமையால்வித்தியாசமானமலராகவும்இந்தஆவணம்பரிமளிக்கிறது.

கவிஞர்அம்பிஅகவை90மலரைபுகலிடத்தில்சமர்ப்பித்துள்ளவிழாக்குழுவில்அங்கம்வகித்தவர்கள்பெயர்களையும்இச்சந்தர்ப்பத்தில்குறிப்பிட்டேயாகவேண்டும்.

பேராசிரியர்ஆசி. கந்தராஜா, லெ. முருகபூபதி, சந்திரிகாசுப்பிரமணியன், தி. திருநந்தகுமார், செளந்தரிகணேசன், அன்புஜெயா, நடராஜாகருணாகரன், செ. பாஸ்கரன், கானாபிரபா, யசோதாபத்மநாதன், ஜெ. ஜெய்ராம், ஞானசேகரம்சிறீறங்கன், ஊஷாஜவகர், நா. சுகிர்தன், ரஞ்சகுமார்சோமபால, ச. சுந்தரதாஸ்.

இவர்கள்அனைவரும்ஒன்றிணைந்திருந்தமையால்தான்எங்கள்மத்தியில்வாழும்சாதனையாளர்அம்பிஅவர்களின்வாழ்வையும்பணிகளையும்நன்றியோடுநினைவுகூரும்விழாவும்நடந்து, சிறப்புமலரும்வெளியாகியிருக்கிறது.

வாழும்காலத்திலேயேஆளுமைகள்பாராட்டப்படவேண்டும்என்றவார்த்தைகளுக்குஅம்பிசிறப்புமலர்முன்னுதாரணமாகவிளங்குகிறது.

——-0——–

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

 

Share:

Author: theneeweb