145 கிலோகிராம் எடைகொண்ட கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் 145 கிலோகிராம் எடைகொண்ட கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.

அதனுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதானார்.

காவற்துறையினுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், திக்கம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட லாவோஸ் பிரஜையை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கிடைத்திருப்பதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மலேசியா கோலாலம்பூரில் இருந்து இலங்கை வந்த அவர் காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

அவரது பயண பொதியிலிருந்து 2 கிலோ 623 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் மீட்கப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb