சிங்கள ராஜ்ய எனும் ஞானசாரரின் பிரகடனம் ஒரு பிரிவினை வாதமாகும்

சிங்கள ராஜ்ய எனும் ஞானசாரரின் பிரகடனம் ஒரு பிரிவினை வாதமாகும் எனவும் ஞானசாரரின் இந்த பிரகடனத்தை சட்டமும் ஒழுங்கும் நீதியும் எவ்வாறு கையாளப்போகின்றது எனவும் கலாநிதி நல்லையா குமரகுருபரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள ராஜ்ய ஞானசாரரின் பிரகடனம் இன்றைய பல்லினம், பல்மதம் கொண்ட ஒன்றுபட்ட இலங்கை அரசை சிதைக்கும் சதி கொண்ட கலவர முயற்சியாகும் என்பதை இலங்கையர் ஒவொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஞானசாரரின் பிரகடனத்தை இலங்கையின் சட்டமும் ஒழுங்கும் நீதியும் எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை சம உரிமை கொண்ட பச்சை தமிழினம் இலங்கையனாக எதிர்பார்த்து நிற்கின்றது எனவும், தமிழ் தேசிய பணி குழுவின் தலைவர் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ராஜ்ய பிரகடனம் ஏற்றுக் கொள்ள கூடியது என்றால் பல தமிழ் ராஜ்யங்கள் பற்றி பேச முடியும். 1815 ற்கு முன்னான சிங்கள ராஜ்யம் பற்றிய ஞானசாரரின் பிரகடனம் 1811 ஆன யாழ்ப்பாண ராஜ்யத்தையும் வன்னி ராஜ்யத்தையும் நினைவூட்டும்.

அந்த வகையில் ஞானசாரரின் பிரகடனம் ஒரு பிரிவினை வாதமாகும். சிங்கள ராஜ்யம் பற்றிய ஞானசாரரின் பிரகடனம் இன்றைய பல்லினம், பல்மதம் கொண்ட ஒன்றுபட்ட இலங்கை அரசை சிதைக்கும் சதி கொண்ட கலவர முயற்சியாகும்.

ஞானசாரரின் பிரகடனத்தை எமது நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நீதியும் எவ்விதம் கையாள போகின்றது என்பது முக்கியமானது. பிரிவினை வாதமாகவும் பார்க்க முடியும் இன சௌஜன்யத்தை குலைக்க தூண்டுவதாக கருதப்பட முடியும் எனவும் நல்லையா குமரகுருபரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share:

Author: theneeweb