சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மற்றுமொருவர் TID யிடம் ஒப்படைப்பு

இவ்வாண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி வெலிமட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிமட, சில்மியாபுர பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சாஹுல் ஹமீட் ஹிஸ்புல்லா என்பவரே இவ்வாறு தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சஹ்ரானுடன் ஹம்பாந்தோட்டை பகுதியில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் இன்று (08) மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb