சுகத்துக்கான தூதுவர்கள் விசேட கருத்தரங்கு

கிளிநொச்சி நகர றோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் காவேரி கலாமன்றத்தின் அணுசரனையில் சுகத்துக்கான தூதுவர்கள் விசேட கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று 09-07-2019 பிற்பகல் நான்கு மணிக்கு இடம்பெற்றது.

தற்காலக உலத்தில் மனிதர்கள் இயற்கையிலிருந்து விலகி செல்லச் செல்ல பல்வேறு நோய்களும் பீடித்துக்கொள்கின்றன. குறிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக பலா் அதிகமாக தொற்றா நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொது மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை தொடர்பில் வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை கொண்டு செல்லும் தூதுவர்களாக பங்குபற்றுனர்கள் இருக்க வேண்டும் என்பதை நோக்காக கொண்டு விசேட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவர்களான ம. குகராசா,ம . ஜெயராசா ஆகியோரால் கருத்துரைகளும் வழங்கப்பட்டன.

அத்தோடு தொழு நோய் சமந்தமாக மக்கள் மத்தியில் காணப்படுகின்ற அச்சத்தை நீக்கும் வகையில் மருத்துவர் மாலதி வரனால் எழுதப்பட்ட நூலும் வெளியீடு செய்யப்பட்டது.

கிளிநொச்சி நகர றோட்டரிக் கழகத்தின் தலைவர் அதிபர் பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளாரும், யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி, காவேரி கலா மன்ற இயக்குநர் சபை உறுப்பினர் மருத்துவர் மாலதி வரன், இறையியல் கல்லூரி அதிபர் வண.யூட் சுதர்சன், காவேரி கலா மன்ற இயக்குநர் வண.அருட்தந்தை யோசுவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb